கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்துவரும் நிலையில் மேலும் இரு கதாநாயகிகள் இணைந்துள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. ஆனால் தொடங்கிய வேகத்திலேயே படப்பிடிப்பு நின்றுபோனது. கமல் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததால் படப்பிடிப்பு தாமதமாகிறது என்று கூறப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிப்பிலிருந்து பின்வாங்குவதாகவும் ஷங்கர் வேறு தயாரிப்பாளர்களை அணுகிவருவதாகவும் திரைத்துறையில் பேசப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது.
முதல் பாகத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, ஊர்மிளா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் காஜல் அகர்வால் நடிப்பது ஏற்கெனவே உறுதியான நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷும், பிரியா பவானி சங்கரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்ந்தெடுத்து நடித்துவரும் இருவரும் கமலுடன் இணைந்து இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக நடிக்கவுள்ளனர்.
ஊழலுக்கு எதிரான அரசியலையே வெவ்வேறு விதமாக தன் படங்களில் கூறிவருபவர் ஷங்கர். இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகமும் அத்தகைய கருத்தை தாங்கியே உருவாகியிருந்தது. இந்நிலையில் கமல் அரசியலுக்கு வந்ததற்குப் பின் உருவாகும் இந்தியன் 2 திரைப்படம் அத்தகைய அரசியலைத் தாங்கிவருவது கவனிக்கத்தக்கது.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
**
மேலும் படிக்க
**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[என் மகனாகப் பார்க்காதீர்கள்… ‘திமுக’காரனாகப் பாருங்கள்!](https://minnambalam.com/k/2019/07/16/27)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
,”




