முதலமைச்சருக்கு எத்தனை எழுத்து-அப்டேட் குமார்

Published On:

| By Balaji

வழக்கமா வீக்கெண்டில் புரட்சி செய்யுறது அதிமுக ஆட்களாகத்தான் இருப்பார்கள். ஆனா இன்னிக்கு காலையிலேயே, கேநகூ அலைஸ் மநகூ நெட்டிசன்கள் #ThisTime4MNK என்கிற டேக் எழுதி ம்ம்ம் கெளப்புங்கள்”ன்னு காலையிலேயே பொங்கப்பார்த்தார்கள். வழக்கம் போல் அவங்க ஒரு ரூட்டை போட இணையப்போராளிகள் வேற ஒரு ரூட்டில் அந்த டேகை அழைத்துப்போனார்கள். அந்த ட்விட்கள் கீழே.

// @RavikumarMGR

ADVERTISEMENT

இதுல சோகம் என்னன்னா,வைகோவை நம்புற அளவுக்கு இன்னும் தமிழகம் முன்னேறலைங்குறது தான்! #ThisTime4MNK //

// ‏@ashik_twitz

ADVERTISEMENT

முதலமைச்சர்க்கு எத்தனை எழுத்துக்கள்னு உங்க முதல்வர் வேட்பாளர சொல்ல சொல்லுங்கயா -சீமான் #ThisTime4MNK //

‏//@Iam_Blade

ADVERTISEMENT

ஒரு பத்தே பத்து நிமிஷம் கேப்டன உளறாம தெளிவா பேச சொல்லுங்கையா! நான் கேப்டனுக்கு ஓட்டு போடுறேன் #ThisTime4MNK //

//@jokinjey

திமுக கூட்டணியில் இருக்கும் போது வைகோவின் ஈகோ மலை உச்சியிலும்.பிற கட்சிகளோடு இருக்கும் போது அவர்கள் காலடியிலும் இருக்கும். இதான் தோல்வி //

// ‏@dr__dazZ

1993-ல் திமுகல இருந்து பிரிஞ்சு போன அந்த தைரியசாலி தான், இப்ப 2004-ல் 39 தொகுதி டெபாசிட் போனவரை முதல்வர் வேட்பாளரா அறிவிக்குறாரு???? //

//‏@im_amavasai

ஆணவக் கொலைய தடுக்க ஆதரிக்கனுமா அடேய்களா இதுல இருக்கிறவங்க தான் அதை தூண்டிவிடுறதே அப்புறம் எப்படி இவங்கள ஆதரிக்க கே.ந.கூஸ் #ThisTime4MNK//

//@vetsathish

கேப்டன் வர்றதுக்கு முன்னாடி MNK “மாற்று சக்தி “மாதிரி தெரிஞ்சது.இப்ப “ஏமாற்று சக்தி” மாதிரி தெரியுது. #ThisTime4MNK //

// ‏@Immuraliraj

மநகூ க்கு வாய்ப்பளிங்கனு சொல்லுறீங்களே, ஓட்டுக்கு தருவதாக சொன்ன பணத்தை அந்த ஏழைவிவசாயி வந்து கேட்டால் நான் எங்கடா போவேன். //

#ThisTime4MNK

//@RavikumarMGR

கலைஞர்,ஜெ குடும்பமே எத்தனை நாள் சம்பாதிக்குறது ஒரு தடவை கேப்டன் குடும்பமும் சம்பாதிக்கட்டுமே! #ThisTime4MNK//

// ‏@writercsk

பொழுது போகாதவன் பொண்ணு பார்க்கப் போனானாம். #ThisTime4MNK //

****************************************************************************************************************

// புதியதடம் மேகவண்ணன்

ஏதோ ஒரு சிப்காட் தொழிற்பேட்டையில் மருமகன் பேரில் 500 கோடி ரூபாய்க்கு ஒரு ஜவுளி மில் வாங்கிருக்காராமே வைகோ ?!

இந்தமாதிரி டீல் எல்லாம் தேர்தலுக்கு அப்புறம் பண்ணிக்கலாம்னு அட்வைஸ் பண்ணிருக்கலாமே காம்ரேடு களே?! //

// Vignesh Palaniswamy

·

ஒருவேளை தேர்தல் முடிவில் தொங்கு சட்டமன்றம் வந்து,

ம.ந.கூ யின் தயவு ஆட்சி அமைக்க தேவைப்பட்டால்,

திமுக தலைவர் கருணாநிதி, குறைந்தபட்ச செயல்திட்டத்திற்கு தயாராகி ஆரதவு கேட்க தயாராகவே இருப்பார்.

அதே நேரம், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ம.ந.கூ யை உடைத்து எம்எல்ஏ களை தன்பக்கம் இழுக்க முயற்சிப்பார்.

*

ஆனால், அப்படி நடந்தால் திமுக தலைவரை பதவிக்காக அலைந்து தன்னை திட்டியவர்களிடமே சமரசம் பேசுகிறார் என ஏசுவார்கள் ஆனால், ஜெயலலிதா கூட்டணியை உடைத்து எம்எல்ஏ களை இழுத்தாலும் வாயை திறக்கமாட்டார்கள்.

*

ஏன்னா அவுங்க டிசைன் அப்படி… //,”

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share