இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவதைக் கண்டித்து இன்று (செப்டம்பர் 21) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவதைக் கண்டித்தும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளை விடுவிக்கக் கோரியும், மத்திய மாநில அரசுகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.என்.பிரதாபன் பங்கேற்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.