லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் காசாளராகப் பணிபுரிந்த பழனிச்சாமி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பான நீதித்துறை நடுவர் விசாரணை தொடங்கியுள்ளது.
கோவையைச் சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் ஏப்ரல் 30 வரை 4 நாட்களாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின்போது , மார்ட்டினுக்கு சொந்தமான ஹோமியோபதி மருத்துவமனையிலும் சோதனை நடந்தது. அப்போது அங்கு காசாளராகப் பணிபுரிந்த பழனிச்சாமியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பழனிச்சாமியின் வீட்டுக்கும் சென்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில் மே 3ஆம் தேதி காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனிச்சாமி பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
பழனிச்சாமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், உடலில் காயங்கள் இருப்பதாகவும் கூறி, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மகன் ரோஹின்குமார் மே 7ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தார். பழனிச்சாமியின் உடலில் காயங்கள் இருந்தது தொடர்பாக விரிவான அறிக்கை கேட்டு அரசுக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு மறுத்தும், தனி நீதிபதி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டனர்.
இதன்படி பழனிச்சாமியின் மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்க கோவை நீதித்துறை நடுவர் ராமதாஸ் நியமிக்கப்பட்டார். அவர் இன்று (மே 22) காலையில் தனது விசாரணையைத் துவக்கினார். கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள பழனிச்சாமியின் உடலை அவர் பார்வையிட்டார். மேலும் பழனிச்சாமியின் உடற்கூராய்வு அறிக்கை மற்றும் மருத்துவச் சான்றிதழ்களை ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக ரோஹின்குமார் தரப்பு வழக்கறிஞர் சத்தியபாலன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பழனிச்சாமி மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இன்று நீதித்துறை நடுவர் ராமதாஸ் தனது விசாரணையை தொடங்கியுள்ளார். பழனிச்சாமியின் உடலைப் பார்க்க குடும்பத்தாருக்கு அனுமதியளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, பழனிச்சாமியின் மனைவி, இரண்டு மகன்கள், அக்கா மகன், அவருடைய நண்பர், வழக்கறிஞர்கள் அவரது உடலை இன்று பார்த்துள்ளோம். மேற்கொண்டு விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்துள்ளனர்” என்றார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[அமித் ஷா பேரம்… ஆடிப் போன ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/05/22/36)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சந்தித்த இபிஎஸ் மனைவி ராதா-ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி](https://minnambalam.com/k/2019/05/21/93)
**
.
**
[எடப்பாடி- தோப்பு வெங்கடாசலம்: நேருக்கு நேர் நடந்தது என்ன?](https://minnambalam.com/k/2019/05/22/43)
**
.
**
[பிரதமர் ப.சிதம்பரம்? மம்தா வலியுறுத்தல்!](https://minnambalam.com/k/2019/05/22/67)
**
.
. **
[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/21/27)
**
.
.





