பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இந்தியாவிலேயே அதிகளவு போதைப்பொருள் பயன்பாட்டில் இருப்பது அனைவருக்குமே தெரிந்த செய்தி. போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களை அரசு கண்டுபிடித்து, அவர்களுக்கு மறுவாழ்வு தந்து அவர்களை மீண்டும் இந்த சமுதாயத்துக்குப் பயன்படும்விதத்தில் மாற்றவேண்டும். ஆனால், அரசாங்கம் நடத்தும் மறுவாழ்வு மையங்களிலேயே போதைப் பொருட்கள் விற்பனை நடந்தால் என்ன செய்வது?
பஞ்சாப் மாநிலத்தில் அளவுகடந்த போதைப் பொருட்கள் புழங்குவதைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் போராட்டம் நடந்தது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல போதை மருந்து மறுவாழ்வு மையத்தில், போதைப் பொருட்கள் விற்பனை நடந்துவருவதை தனியார் தொலைக்காட்சியொன்று படம்பிடித்து வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு உறுதியளித்துள்ளது.�,