பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் சித்திரை மாதம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா நாளை காலை 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. நாளை இரவு சுவாமி சுந்தரேஸ்வரர் சிம்ம வாகனத்திலும், மீனாட்சி அம்மன் விருட்சிக வாகனத்திலும் நான்கு மாசி வீதிகளில் உலா வருவார்கள். இந்த சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 17-ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. ஏப்ரல் 18-ம் தேதி மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சியும் ஏப்ரல் 20-ம் தேதி மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பிரியாவிடை தேரோட்டமும் நடைபெறுகிறது. 21-ம் தேதி கோயில் தெப்பத்தில் தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் விழா நிறைவு பெற உள்ளது. மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண நிகழ்ச்சியைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று தொடக்கம்
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
