மதுரை மக்களவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. அப்போது தேர்தல் நடந்து முடிந்து விட்டதால் இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் மதுரை மக்களவைத் தொகுதிக்குத் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. முதலில் 18ஆம் தேதி சித்திரைத் திருவிழா நடைபெறும் என்பதால் அன்றைய தினம் தேர்தலை நடத்தினால் வாக்குப்பதிவு குறையும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாகத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் , உச்ச நீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் தேர்தலைத் தள்ளிவைக்க முடியாது என்று தீர்ப்பு வந்ததை அடுத்து அறிவித்தபடி அன்றைய தினமே வாக்குப் பதிவு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கே,கே.ரமேஷ் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அப்போது, பொதுநலம் என்ற பெயரில் இதுபோல வழக்கு தொடர்வதை மனுதாரர் வாடிக்கையாக வைத்துள்ளார் என்றும், நீதிமன்ற நேரத்தை வீணடித்த காரணத்திற்காக அவருக்கு அபராதம் விதிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்ததோடு மனுவையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கே.கே.ரமேஷ் மதுரை தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்தார். அதில், மதுரையில் அதிக அளவு பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அதிமுகவினர் ரூபாய் 70 கோடி அளவுக்கு வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துள்ளனர். மேலும் வாக்குப்பதிவு இயந்திர அறைக்குள் தாசில்தார் சென்று அதன் நகல்களை எடுத்ததாக புகார் எழுந்துள்ளது. எனவே மதுரைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு நேற்று (மே 17) நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் நடந்து முடிந்து விட்டதால், இவ்விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://minnambalam.com/k/2019/05/17/27)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://minnambalam.com/k/2019/05/17/84)
**
.
**
[ரித்தீஷ் மனைவி மீது புகார்!](https://minnambalam.com/k/2019/05/17/51)
**
.
**
[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://minnambalam.com/k/2019/05/16/70)
**
.
**
[ரவீந்திரநாத் எம்பி: கல்வெட்டில் பெயர் மறைப்பு!](https://minnambalam.com/k/2019/05/17/56)
**
.
.





