மணப்பாறையில் பெண்கள் காலிக் குடத்துடன் சாலை மறியல்!

Published On:

| By Balaji

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பணப்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊரில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வராததால் கொதிப்படைந்த பெண்கள் காலிக் குடத்துடன் கிளம்பி மணப்பாறை – மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த ஊராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபின்னர் கலைந்து சென்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share