போர்க்கால நடவடிக்கையில் தண்ணீர் விநியோகம்: உத்தரவு!

Published On:

| By Balaji

போர்க்கால நடவடிக்கையில் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களாகவே, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நீர் கிடைக்காமல் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். தண்ணீர் லாரிகள் மூலமாக மெட்ரோ நீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர தனியார் லாரி உரிமையாளர்கள் மூலமாக சென்னை புறநகர்ப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக நீர் எடுக்கப்படுவதும் தொடர்கிறது. இந்த சூழலில், மக்களுக்குத் தொடர்ந்து தண்ணீர் கிடைக்க போர்க்கால நடவடிக்கைகள் போல ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

நேற்று (ஜூன் 8) இவ்வாரியத்தின் நிர்வாக இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் காணொலிக் காட்சி மூலமாக அனைத்து மாவட்ட குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் உரையாடினார். அப்போது, தமிழகம் முழுவதும் குடிநீர் வடிகால் வாரியம் வைத்துள்ள 1,286 கிணறுகளில் மழைக்கு முன்பும் பின்பும் நீர்ப்புவியியல் நிபுணர்கள் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை அளவிட வேண்டுமென்று தெரிவித்தார்.

“மழை நீர் சேகரிப்பு திட்டப் பராமரிப்பு மற்றும் கட்டுமானத்துக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு மிகவும் மோசமாக உள்ளது. எனவே பொறியாளர்கள், நீர்ப்புவியியல் நிபுணர்கள், அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை எடுத்து அனைத்து தண்ணீர் வினியோகிக்கும் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார் மகேஸ்வரன். சரியான நேரத்தில் அனைவருக்கும் சரியான அளவுடன் தரமான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென்று மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

கடந்த 2 ஆண்டுகளாகவே தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை குறைந்திருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள 17 ஆறுகளில் தாமிரபரணி மட்டுமே வற்றாத ஆறாக உள்ளது எனவும் மகேஸ்வரன் தெரிவித்தார்.

**

ADVERTISEMENT

மேலும் படிக்க

**

**

[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)

**

**

[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)

**

**

[டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!](https://minnambalam.com/k/2019/06/07/83)

**

**

[12ஆம் வகுப்புப் பாடத்தில் இடம்பெற்ற சிவாஜி](https://minnambalam.com/k/2019/06/07/16)

**

**

[மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!](https://minnambalam.com/k/2019/06/07/53)

**

,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share