காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதைக்கு அடிமையானவர்களுக்கான தனியார் மறுவாழ்வு மையத்தில் ஒருவர் கண்மூடித்தனமாகத் தாக்கப்படும் காட்சிகள் அண்மையில், வாட்ஸ்அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நௌம்பூர் மாதா தெருவைச் சேர்ந்த குப்புசாமி, மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்துவந்த அவர், குடிப்பழக்கம் இருந்ததால் இந்த போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் வீடு திரும்பிய அவர், மறுவாழ்வு மையத்தின் நிர்வாகிகள் தன்னை கடுமையாகத் தாக்கியதாக வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்திருந்தார். அவரை மீண்டும் மறுவாழ்வு மையத்தில் சேர்க்க குடும்பத்தினர் முடிவு செய்ததால், மீண்டும் தன்னை அடிப்பார்களோ என்ற பயத்தில் குப்புசாமி நேற்று, தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாகவும், இவர்தான் அந்த வீடியோவில் தாக்குதலுக்கு ஆளானவர் என்றும் கூறப்படுகிறது. மனைவி விட்டுச் சென்றுவிட்டதால் தனிமை மற்றும் விரக்தி காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று ‘காட் ஹெல்த்திங் பவுண்டேஷன்’ என்ற அந்த தனியார் போதை மறுவாழ்வு மையத்தில், சமூகநலத்துறை இணை இயக்குநர் ராஜசரவணக்குமார் தலைமையில் 4 அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சை பெறும் 40 பேரிடம் அவர்கள் விசாரணை நடத்தினர்.�,
{போதை மறுவாழ்வு மைய சித்திரவதை-ஒருவர் தற்கொலை
Published On:
| By Balaji

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel