]‘பேட்மேன்’ வரிசையில் ‘பேட்வுமன்’!

Published On:

| By Balaji

ஹாலிவுட்டில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் சூப்பர் ஹீரோயின் கதாபாத்திரமான ‘பேட்வுமன்’ டிவி தொடரின் புரொமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஹாலிவுட் திரையுலகில் சூப்பர் ஹீரோக்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பல்வேறு காமிக்ஸ் புத்தகங்களில் இருக்கும் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ‘பேட்மேன்’ என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தக் கற்பனையான கதாபாத்திரத்தை வைத்து ஏராளமான படங்களும் வெளியாகி, ரசிகர்களிடம் அமோக வரவேற்பையும் பெற்றுள்ளது.

‘பேட்மேன்’-ஐத் தொடர்ந்து தற்போது ‘பேட்வுமன்’ என சூப்பர் ஹீரோயின் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதைப் படமாக இல்லாமல் டிவி தொடராக ஒளிபரப்பவுள்ளனர். இதற்கான முதல் புரோமோ [வீடியோ](https://www.youtube.com/watch?v=-ojXMRuSC_w) காட்சியை ‘சிடபிள்யூ’ டிவியில் ‘அரோவ்’ என்ற தொடருக்கு இடையே ஒளிபரப்பட்டுள்ளது. இதில் பேட்வுமன்னாக ஹாலிவுட் நடிகை ரூபி ரோஸ் நடித்துள்ளார். இத்தொடர் 2019ஆம் ஆண்டு ஆரம்பித்து 2020 வரை ஒளிபரப்பப்படுகிறது.

இதுகுறித்து தன்பால் ஈர்ப்பாளரான ரூபி ரோஸ் தனது இணையபக்கத்தில், “இந்தக் கதாபாத்திரம் நடிப்பதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். ஏன் என்றால் இது எனது சிறிய வயது கனவு. LGBT குழுவில் இளம் உறுப்பினராக இருந்தபோது தொலைக்காட்களில் இது போன்றதொரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஆசைப்பட்டேன். தற்போது அது நிறைவேறியுள்ளது” என்று பதிவு செய்துள்ளார். ‘பேட்மேன்’ போல் இந்த ‘பேட்வுமன்’ கதாபாத்திரமும் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share