இந்தியா அணி 2018 ஆம் ஆண்டில் பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளும் கிரிக்கெட் தொடரில் மோதவுள்ளது. ஆங்கிலேயரின் ஆட்சியில் இருந்து விடுதலை வாங்கிய 70வது ஆண்டினை இலங்கை அடுத்த ஆண்டு கொண்டாட இருக்கின்றது. இதனால் 4 நாடுகள் மோதும் கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டி மேல் கூறிய மூன்று நாடுகளிடமும் கேட்கப்பட்டது. அதற்கு தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சம்மதம் தெரிவித்த நிலையில் இந்திய நேற்று சம்மதம் அளித்து ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவலை, இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்கா சுமதிபலா தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடனான நேரடித் தொடரை தவிர்த்து வந்த இந்திய அணி இந்தத் தொடருக்கு சம்மதம் தெரிவித்துள்ளது. ஐசிசி தொடரை தவிர்த்து ஐந்து ஆண்டுகளுக்குபின் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடவுள்ளது.
