பெருமாள் தண்டிப்பார்-நீக்கப்பட்ட தேமுதிக வேட்பாளர் ஆவேசம்

Published On:

| By Balaji

காஞ்சிபுரம் தொகுதிக்கு தேமுதிக வேட்பாளராக சாட்சி சண்முகம்சுந்தரம் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை சண்முகம்சுந்தரத்தை நீக்கிவிட்டு, ஏகம்பரத்தை காஞ்சிபுரம் வேட்பாளராக விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்த அதிர்ச்சி செய்தியைக்கேட்ட சண்முகம்சுந்தரம், அவசரம் அவசரமாகப் புறப்பட்டு ‘எடுடா வண்டியை… திருப்பதிக்குப் போடா’ என தனது ஓட்டுநரிடம் சொல்லியிருக்கிறார். காரில் போகும்போது பத்திரிகையாளர்கள் தொடர்புகொண்டு நீக்கத்துக்குக் காரணம் கேட்டனர். அதற்கு என்னை கேப்டன் நியமித்தார், பிரேமலதாவும், சுதீஷும் சேர்ந்து என்னை நீக்கிவிட்டு ஏகம்பரத்தை நியமித்துள்ளார்கள். பிரேமலதாவின் கட்டுப்பாட்டில்தான் கட்சி உள்ளது. அதனால்தான் திருப்பதி ஏழுமலையானைப் பார்த்து குறைகளை சொல்லிட்டு வரப்போகிறேன், அந்த ஏழுமலையான் நிச்சயம் சுதீஷ்க்கும் அண்ணியாருக்கும் தண்டனை கொடுப்பார்” எனத் தெரிவித்துவிட்டு மலை ஏறினார்.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share