புலனாய்வுத்துறை இயக்குநர் பதவி நீக்கம்: டொனால்டு ட்ரம்ப்

Published On:

| By Balaji

�கடந்த 10 ஆண்டுகளாக எஃப்.பி.ஐ-யின் இயக்குநராக ஜேம்ஸ் கோமே பதவி வகித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் அப்பதவியில் இருந்து திடீரென அமெரிக்க அதிபரால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மே 9ஆம் தேதி இதுகுறித்து டொனால்டு ட்ரம்ப் கடிதம் மூலம் அவருக்கு தெரிவித்தார். அக்கடிதத்தில், “புலனாய்வுத்துறையை உங்களால் சரியாக நடத்த முடியவில்லை என அட்டர்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, உங்களை இப்பதவியில் இருந்து நீக்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தான் பதவி நீக்கம் செய்யப்பட்ட தகவலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கோமே பதவி நீக்கம் குறித்து வெளியிட்டார். அதிபர் தேர்தலின்போது ஐனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனின் பிரசார இ-மெயில்கள் வெளியாகின. ட்ரம்புக்கு ஆதரவாக ரஷியா அவற்றை திருடி வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்த விசாரணையில் புலனாய்வுத் துறை ஈடுபட்டிருந்தது. அதற்கு தலைவராக அவர் சரிவர ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share