புற்றுநோயைப் போக்கும் முயற்சியில் தோனியின் ஆடை!

Published On:

| By Balaji

தோனியின் விளம்பரப் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் ஏலம் விடப்பட்டு அந்தத் தொகை புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு வழங்கப்படவிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி விளையாட்டு மட்டுமல்லாது விளம்பரப் படங்களிலும் நடித்துவருகிறார். உலக அளவில் விளம்பரம் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கும் வீரர்களின் பட்டியலிலும் குறிப்பிடத்தக்க இடத்தில் இருக்கிறார்.

ADVERTISEMENT

ஸ்நிக்கர் எனும் சாக்லேட் விளம்பரத்தில் அவர் உடுத்தியிருந்த போர் வீரர் போன்ற ஆடை மற்றும் 7ஆம் எண் பொறித்த ஜெர்ஸி ஆகியவை தோனியின் ஆட்டோகிராப்புடன் தற்போது ஏலத்துக்கு வந்துள்ளன. இதில் கிடைக்கும் தொகையானது, டாட்டா மெமோரியல் மருத்துவமனையின் யூனிட்டான தி லியூகேமியா லைம்போமா ஃபவுண்டேஷனில் புற்றுநோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு வழங்கப்படவிருக்கிறது.

இந்த ஆடைகளை ஏலத்துக்குத் தர முன்வந்த இவ்விளம்பரத்தை தயாரித்த கெரோஸின் ஃபில்ம்ஸ் நிறுவனம், www.SaltScout.com எனும் தளத்தில் இதை ஏலத்திற்கு அறிமுகம் செய்துள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share