சஹாரா பாலைவனத்தில் 50 ஆண்டுக்கு பிறகு பெய்த மழை காரணமாக அங்குள்ள ஏரி ஒன்று நிரம்பி வழிகிறது.
சஹாரா என்றால் நினைவுக்கு வருவது வறட்சி, வெயில், மணல்பரப்பு போன்றவை தான். ஆப்பிரிக்காவில் வடக்கு மேற்கு மத்திய பகுதியில் 9 மில்லியன் சதுர கிலோ மீட்டர் அளவுக்கு பரந்து விரிந்த பெரிய பாலைவனம் இதுவாகும்.
சஹாரா பாலைவனம் பூமியின் மிகப்பெரிய வெப்பப் பாலைவனம். ஆப்பிரிக்கக் கண்டத்தின் கலாச்சாரம், வரலாற்றில் சஹாராவுக்கு முக்கிய இடமுண்டு.
சஹாரா பாலைவனம் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து செங்கடல் வரை வட ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. எகிப்து, லிபியா, துனிசியா, அல்ஜீரியா, மொராக்கோ, மாலி, நைஜர், சாட், சூடான் உள்ளிட்ட பதினோரு நாடுகளின் பகுதிகளை சஹாரா உள்ளடக்கியிருக்கிறது.
இந்த நிலையில்,, மொராக்கோ நாட்டில் இருக்கும் இந்த பாலைவனத்தில் உள்ள இரிக்கி ஏரிதண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது. இதற்கு காரணம் சஹாரா பாலைவனத்தில் பெய்த பெரு மழைதான்.
கடந்த 50 ஆண்டுகளாக வற்றியிருந்த ஏரி தற்போது நீர் நிரம்பி காணப்படுகிறது. சராசரியாக ஓராண்டில் பெய்ய வேண்டிய மழையை விட கூடுதலாக ஓரிருநாளில் கொட்டிய கனமழையே இதற்கு காரணம் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதாவது 24 மணி நேரத்தில் 100 மி.மீ மழை கொட்டியுள்ளது.
பாலைவனத்தில் தேங்கிய வெள்ள நீர், ஆங்காங்கே குட்டைகளாக காட்சி அளிக்கும் படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. பருவகால மாறுபாட்டால் இந்த மழை பெய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
நட்புக்கு வயது தடை கிடையாது… ரத்தன் டாடாவின் நண்பர் சாந்தனு யார்?