புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவு ஜிஎஸ்டி வசூல்!

Published On:

| By admin

நாட்டில் இதுவரை இல்லாத அளவாக மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
ஒன்றிய நிதியமைச்சகம் ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 95 கோடி ஆகும். இதில், சிஜிஎஸ்டி ரூ.25,830 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.32,378 கோடி ஆகும். பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.39,131 கோடி உட்பட ஐஜிஎஸ்டி வசூல் ரூ.74,470 கோடி ஆகும்.
பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.981 கோடி உட்பட செஸ் வரி மூலம் ரூ.9,414 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி தொகையை விட நடப்பு ஆண்டு 15 சதவிகிதம் கூடுதலாகக் கிடைத்துள்ளது.
மார்ச் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது. இது ஜனவரி மாதம் வசூலிக்கப்பட்ட ரூ.1.41 டிரில்லியன் என்ற முந்தைய சாதனையை முறியடித்தது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

**- ராஜ்-**

ADVERTISEMENT
Photo of author
admin
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share