^பிரபாஸின் கன்னத்தில் தட்டிய ரசிகை!

Published On:

| By Balaji

b

நடிகர் பிரபாஸின் கன்னத்தில் ரசிகை ஒருவர் தட்டிவிட்டு ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுவருகிறது.

பாகுபலி 2 படத்திற்குப் பின் பிரபாஸ் நடிப்பில் வேறெந்தப் படமும் வெளியாகவில்லை. பாகுபலி திரைப்படம் பிராபாஸை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது.

தற்போது பிரபாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் தயாராகியுள்ள சாஹோ படத்தில் நடித்துமுடித்துள்ளார். சுஜித் இயக்கும் இப்படத்தில் ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் புரோமோஷன் பணிகளில் பிரபாஸ் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் விமான நிலையம் ஒன்றில் பிரபாஸைப் பார்த்த ரசிகை ஒருவர் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். பிரபாஸுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட உற்சாகத்தில் அதே இடத்தில் துள்ளிக் குதித்த அந்த ரசிகை அவரது கன்னத்தில் தட்டிச் சென்றார். ஆனால் இதற்கு கோபப்படாத பிரபாஸ் மற்றொரு ரசிகருடன் கன்னத்தை தடவிக் கொண்டே புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.

இந்த [வீடியோ](https://www.instagram.com/p/BuljAWkH44f/) சமூக வலைதளங்களில் அதிக நபர்களால் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டுவருகிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share