பால் விவகாரம் – சட்டப்படி நடவடிக்கை : ராஜேந்திர பாலாஜி

Published On:

| By Balaji

பாலில் தனியார் நிறுவனங்கள் கலப்படம் செய்வது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தனியார் பால் நிறுவனங்களில் கலப்படம் செய்யப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில், ஜூன் 27-ஆம் தேதி தனியார் பால் நிறுவனகள் கலப்படம் செய்யப்பட்டிருப்பது சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். முதல் கட்டமாக நெஸ்லே எவ்ரிடே மற்றும் ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பாலில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக அவர் அறிவித்தார். மேலும், கலப்படம் செய்த நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுத்து தடை செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து, ஜூன் 29-ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “பால் கலப்பட விவகாரம் தொடர்பாக முதல்வரிடம் கவனத்துக்கு கொண்டு சென்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. எனவே, இது சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பால் கலப்படம் குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும். கலப்படம் செய்யப்பட்ட நிறுவனங்கள் பெரிய நிறுவனங்கள் என்பதால் இதற்கு சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கமுடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share