பாஜக நாம் தமிழரை விட அதிக வாக்கு வாங்கினால் கட்சியை கலைத்து விடுகிறேன் – சீமான் சவால்

Published On:

| By vivekanandhan

நாம் தமிழர் கட்சியை விட பாஜக அதிக வாக்குகளைப் பெற்றால் நான் கட்சியைக் கலைத்து விடுகிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.

சி.பா.ஆதித்தனார் நினைவு நாளான இன்று (மே 24) சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சீமான், பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார்.

ADVERTISEMENT

அப்போது செய்தியாளர்கள் அவரிடம், தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்று அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சீமான், “தைரியமிருந்தால் தனித்து நின்று போட்டியிட்டு காட்டுங்கள். ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு தனியாக நீங்கள் பெற்ற வாக்குகள் எத்தனை என்று பார்ப்போம். நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளை பாஜக பெற்றிருந்தால் நான் கட்சியை கலைத்து விட்டு போய் விடுகிறேன். யார் பெரிய கட்சி என்று தெரிந்து விடும் இல்லையா. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை கூட்டிக் காட்டக் கூடாது. தனியாக நீங்கள் எவ்வளவு வாக்கு பெற்றிருக்கிறீர்கள் என்பதைக் காட்ட வேண்டும்” என்று பாஜகவிற்கு சவால் விட்டுள்ளார்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெள்ளை உடை திருவள்ளுவர் சிலை : ஆளுநர் வழிபாடு!

ADVERTISEMENT

“கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து நடவடிக்கை எடுங்க” : முல்லை பெரியாறு விவகாரத்தில் ஈபிஎஸ் வலியுறுத்தல்!

“நம்முடைய கெட்ட நேரம் இவர் வந்து வாய்த்திருக்கிறார்” : ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share