பந்தய குத்துச்சண்டை

Published On:

| By Balaji

ஜெயம் ரவி நடித்த ‘பூலோகம்’ வெளியான பின்னர்தான் தமிழகத்தின் பிறபகுதி மக்களுக்கு சென்னையில் பாரம்பரியமான தொழில் முறை குத்துச்சண்டை குடும்பங்கள் உள்ளன என்பதே தெரியவந்தது. தொழில் முறை குத்துச்சண்டை இன்றளவும் சென்னையில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. ஆனால் உலகம் முழுவதும் தொழில் முறை குத்துச்சண்டை பரபரப்பாக நடந்து வருகின்றன. தாய்லாந்து தொடங்கி தெற்காசியா முழுவதும் வெறித்தனமாக விளையாடப்படும் இந்த தொழில் முறை குத்துச்சண்டையில் பங்கு பெறும் வீரர்கள் ஹீரோக்களை போல கொண்டாடாப்படுகிறார்கள். இதில் கொட்டும் பணமும் அதிகம் என்பதால் பின்தங்கிய நாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்கின்றனர்.

அள்ள அள்ள பணம் – இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான் மாலத்தீவுக்கு ஓய்வுக்காக வந்த ப்ளைவெதர் 20000 பவுண்ட்ஸ்களை செலவழித்துவிட்டு சந்தோஷமாக கிளம்பியுள்ளார். நான் தேவைக்கு அதிகமாகவே பணம் சம்பாதித்துள்ளேன். ஆனால் அளவுக்கு அதிகமாகவே உழைத்துள்ளேன்” என அங்கிருந்து கிளம்புமுன் ப்ளைவெதர் தெரிவித்துள்ளார். உண்மையும் அதுவே. கடைசி மேட்சில் ப்ளைவெதர் தோற்றாலும், சம்பாரித்தது கிட்டதட்ட 2000 கோடி ரூபாய்கள். அமெரிக்க லோக்கல் கிளப்களிலோ,பிலிப்பைன்ஸ் கிளப்களிலோ ஒரு ரவுண்ட் சண்டையில் தாக்கு பிடித்தால் 200 டாலர் வழங்கப்படுகிறது.நான்கு ரவுண்ட் தாக்குபிடித்தால் 160 டாலர்கள் மேனேஜருக்கு வழங்க வேண்டும். நீங்கள் எத்தனை குத்துக்களை தாங்கிக்கொண்டு நிற்கிறீர்களோ அவ்வளவு பணம். ஆக கீழேயிருந்து மேலே போகப்போக பணம் கூடிக்கொண்டே போகிறது.

ADVERTISEMENT

“மத்த விளையாட்டுகள் போல தொழில் முறை குத்துச்சண்டைகளில் தகுதிச்சுற்று ஏதும் இன்றி நேரிடையாக பங்கு பெறலாம். உங்களுக்கு அதற்கான உடல் தகுதியும், வலுவான தாடையும் இருந்தால் போதும். ஆனால் பணத்துக்கு ஆசைப்பட்டு விளையாடத் தெரியாமல் ‘ரிங்’கினுள் சென்றால் தாடை கண்ணாடிக்குடுவையாய் நொறுங்கிவிடும். அது போல உங்கள் சண்டையிடும் திறனை முன் வைத்துதான் போட்டியில் பங்கேற்கிறீர்கள் ஆனால் உங்கள் உடல்தான் உங்களின் மூலதனம். என் வீட்டில் உலகின் மிகச்சிறந்த பைக்குகள் நிற்கின்றன ஆனால் ஓட்ட முடியாது. என் குழந்தைகள் பாராக்ளைடிங் போகிறார்கள் நான் தரை நின்று வேடிக்கை பார்க்கிறேன் காரணம் என் உடலை எந்த சிதைவுமின்றி குத்து வாங்க ஆயுத்தமாக வைத்திருக்க வேண்டும். காரணம்,கால்பந்து குழுவில் தேர்வாகிய பின்னர் அடிபட்டுவிட்டால் அந்த தொடர் முழுவதும் விளையாடாவிட்டாலும் பணம் கொடுத்துவிடுவார்கள். ஆனால் இதில் அப்படி நமக்கு பதிலாக சப்ஸிடியூட் விளையாட முடியாது. நாம் சண்டையிட்டால்தான் நமக்கு பணம்” என்கிறார் நான்கு முறை உலகச்சாம்பியனான கார்ல் ப்ரேச்.

பந்தய குத்துச்சண்டை வீரர்களுக்கும் நிறைய கட்டுப்பாடுகள் உள்ளது. இந்தியாவில் நடைபெறும் தொழில்முறை சண்டைப்போட்டிகளான கராத்தே,குங்பூ,தேக்வாண்டோ, சிலம்பம் போன்றவற்றில் பங்கு பெறும் வீரர்கள் போட்டி முடிந்த பின் சகோதர மனப்பான்மையுடன் செல்ல வேண்டும் என்பது சங்கங்கள் கடைபிடிக்கும் விதி. ஆனால் தொழில்முறை குத்துச்சண்டையில் ரிங்கிற்கு வெளியே வம்பிழுப்பதும் ஒருவகை தந்திர விளையாட்டுதான். எதிர் வீரர் கேவலமான கருத்துக்களை பேட்டிகளிலோ, போட்டிக்கு முன் அரங்கிலோ தெரிவித்தால் அதற்கு பதிலடியை வளையத்துக்குள்தான் தெரிவிக்கவேண்டுமே தவிர, கோபப்பட்டு அடிக்க போனால் உடனடுயாக ரெட்கார்ட் வழங்கப்படும். உண்மையில் அப்படி சீண்டுவதும் விளையாட்டின் ஒரு பகுதிதான். அதற்கு பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டுவிட்டால் நீங்கள் உங்கள் நிலையிழந்து விளையாடி கோபத்தினால் தோற்பீர்கள்.

ADVERTISEMENT

“நான் இந்த உலகில் வேறு யாரையும் விட என்னுடன் மோதும் வீரரை நேசிக்கிறேன்,மதிக்கிறேன். காரணம் எங்களை பணத்துக்காக சண்டையிடச்செய்து விட்டு உலகமே வேடிக்கை பார்க்கிறது. கிரேக்க பேரரசு காலத்தில் அடிமைகளை மோதவிட்டு ரசித்தனர். அடுத்தவனை கொன்றால்தான் உயிர் வாழ முடியும் என்கிற ஒரே வாய்ப்பு வழங்கப்பட்டது. எங்களுக்கு தோற்றாலும் வென்றாலும் பணம் என்கிற இருவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்கிற உலகின் நம்பர் ஒன் வீரரான ப்லிப்பைன்ஸின் மானி பாக்கியோவின் வார்த்தைகள் எவ்வளவு அர்த்தம் பொதிந்தது.


ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share