நிர்மலா சீதாராமன் – பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு… பின்னணி என்ன?

அரசியல்

தமிழகத்தில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (ஆகஸ்ட் 5) டெல்லியில் சந்தித்தார்.

48வது ஜிஎஸ்டி கவுன்சில் மதுரையில் நடைபெறும் என்று மத்திய அரசு முன்னதாக அறிவித்து இருந்தது. ஆனால் தேதி உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் அதுகுறித்து ஆலோசனை நடத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் உள்ள அவருடைய அலுவலகத்தில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்தார்.

ஜிஎஸ்டி வரி தொடர்பாக இருவரும் மாறி மாறி கருத்து தெரிவித்து வரும் நிலையில் மத்திய மாநில நிதி அமைச்சர்களின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி சர்ச்சை மோதல்!

கடந்த சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு மற்றும் உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக விவாதம் நடந்தது. அப்போது, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் தான் உணவுப் பொருட்கள் மீது 5 சதவீத ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்த கருத்தை முற்றிலுமாக மறுத்தார் தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். ”அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் தான் உணவுப் பொருட்கள் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதில் முழு உண்மையில்லை. சண்டிகரில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்ற போது, 56 பொருட்களுக்கு வரி தொடர்பாக ஒவ்வொரு பொருட்களுக்கும் தனித்தனியாக கலந்துரையாடி தேர்வு செய்வதற்கான வழிவகை கொடுக்கவில்லை.” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

உச்சநீதிமன்றத்தின் 49 வது தலைமை நீதிபதி… யார் இந்த யு.யு.லலித்?

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.