}நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பு: திமுக முன்னிலை

Published On:

| By Balaji

தேர்தல் காலங்களில் கருத்துக் கணிப்புகளும் ஒருபக்கம் அனல்பறக்கும். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சி அதிக இடங்களைப் பெறும் என்பது குறித்து, டைம்ஸ் நவ் ஆங்கில தொலைக்காட்சி நடத்திய சி-வோட்டர் கருத்துக்கணிப்பு சமீபத்தில் வெளியானது. இந்தக் கருத்துக்கணிப்பில், அதிமுக 130 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 70 தொகுதிகளும், பாஜக-வுக்கு தொகுதி எதுவும் கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மற்றொரு செய்தி நிறுவனமான ‘நியூஸ் நேஷன்’ 10 ஆயிரம்பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பில், திமுக 107 முதல் 111 இடங்கள்வரை கைப்பற்றும் எனவும், அதிமுக 103 முதல் 107 இடங்களைக் கைப்பற்றும் எனவும், மக்கள் நலக் கூட்டணிக்கு 14 முதல் 18 இடங்கள்வரை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில், கேரளாவில் 75 முதல் 79 இடங்களைக் கைப்பற்றி இடதுசாரிக் கூட்டணி ஆட்சியமைக்கும் எனவும், அசாமில் 54-58 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தைப் பொருத்தவரை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் 165 முதல் 169 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியமைக்கும் எனவும், இடதுசாரிக் கூட்டணிக்கு 81 முதல் 85 இடங்கள் வரையும், காங்கிரஸ் கட்சிக்கு 39 முதல் 43 இடங்கள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்பின்படி திமுக தனிப் பெரும்பான்மை பெறுகிறது. தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share