ADVERTISEMENT

நாளொன்றுக்கு 400 பேர் சாலை விபத்தில் மரணம் இந்தியாவில்!

Published On:

| By Balaji

முன்னர் எல்லாம் ஒருவர் இருவர் இறந்தாலே அது பெரிய விஷயம். இப்போதெல்லாம் டஜன் கணக்கில் மக்கள் விபத்தில் இறந்தால்கூட அதற்காக நாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அந்த அளவுக்கு விபத்துகள் ஏற்படுத்தும் மரணம் மிகச் சாதாரணமான விஷயமாகி விட்டது. உலக அளவில் சாலை விபத்துகளில் இந்தியா பிரதான இடம் வகிப்பதோடு ஆண்டுதோறும் விபத்துகள் அதிகரித்துச் செல்கின்றன.

இதைத் தடுப்பதற்கு மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறியுள்ளார். இந்தியாவில் மட்டும் ஒரு நாளில் 400 பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். இதற்கு காரணம், வாகனங்களின் பெருக்கமும், சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் இருப்பதும், அடிப்படை வசதிகள் அற்ற சாலைகளுமே. அதிவேகமாக வாகனங்களை ஓட்டி செல்வதால்தான் அதிக சாலை விபத்துகள் நடக்கின்றன. கடந்த ஆண்டு இந்தியாவில் 1.46 லட்சம் பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். இது 2014ம் ஆண்டை விட 5 சதவிகிதம் அதிகாரித்துள்ளது என்று மத்திய அரசின் புள்ளிவிபரம் கூறுகிறது.

ADVERTISEMENT

இந்தியாவிலேயே அதிக சாலை விபத்து நடப்பது மும்பையில்தான். பெரும்பாலான விபத்துகளுக்கு வாகன ஓட்டிகளின் கவனக்குறைவே காரணம். இன்னொரு பிரதான காரணம், அளவு கடந்த வேகம். இந்த இரண்டு காரணங்களுக்காகவும்தான் 77.1% பேர் மரணிக்கின்றனர். தினமும் நடக்கும் கொடூர விபத்துகளில் பாதசாரிகளும், மிதிவண்டியில் செல்பவர்களும் 63,089 பேர் உயிரிழக்கின்றனர். 25 சதவிகிதம் பேர் பைக்கில் செல்லும்போது உயிரிழக்கின்றனர். பலியானவர்கள் அனைவருமே 15-34 வயது உள்ளவர்கள். குறிப்பாக 14 வயதிற்குட்பட்ட 20 சிறுவர்கள் சாலை விபத்தில் பலியாகின்றனர். இந்த விபத்துகளை தவிர்க்க நிதின் கட்கரி, “வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்தினால் வாகன ஒட்டிகள் தங்களின் கட்டுப்பாட்டை இழக்காமல் இருப்பார்கள். மேலும் தாழ்வான இடங்களிலும், அதிக மக்கள் நெரிசல் உள்ள இடங்களிலும் வேகத்தடைகளை உருவாக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் என்ன காரணங்களினால் விபத்து நடக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கு தீர்வுகாணும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

‘அரசாங்கம் மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது மக்களும், வாகன ஒட்டிகளும் கவனத்துடன் செயல்பட்டால்தான் இதை ஓரளவுக்குக் குறைக்கமுடியும்’ என்று சாலை பாதுகாப்பு துறை அதிகாரி சஞ்சய் மித்ரா கூறியுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share