மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘முன்னாள் பிரதமர் வாஜ்பாய், என்னை மத்திய அமைச்சராக்க வற்புறுத்தினார். அப்போது அதனை மறுத்தேன். இப்போதைய சூழலில் என்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்திக் கொள்ளாமல் இருப்பது மிகச் சரியான முடிவே. அதே நேரத்தில் முதல்வர் பதவி வேண்டாம் என்று சொல்ல நான் ஒன்றும் பெரிய துறவி கிடையாது. இந்த தேர்தல் என்பது, மிகப்பெரிய யுத்த களமாகும். இதில் ஒருபுறம் திமுக, இன்னொருபுறம் அதிமுக பெரும்பண பலத்துடன் நிற்கின்றன. இந்த யுத்த களத்தில், ஒரு கூட்டணியை முன்னின்று இயக்குகிற சேனாதிபதியாக நான் சில முடிவுகளை எடுத்தே தீர வேண்டும்.’, என்றார்.
நான் துறவி அல்ல – வைகோ
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
