வருங்கால வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம் போன்ற சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. இதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வருங்கால வைப்பு நிதி மற்றும் கிசான் விகாஸ் பத்திரம் போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டிவிகிதங்களைக் குறைத்திருப்பதன் மூலம், நடுத்தர வர்க்கத்தினர் மீது மோடி அரசு தொடுத்துள்ள அடுத்த அடி இது. விவசாயிகளையும், ஏழைகளையும் காக்கத் தவறிய இந்த அரசு, தற்போது நடுத்தர வர்க்கத்தினரையும் கைவிட்டுவிட்டது. மோடிஜி, உங்கள் அரசின் ஈவன்ட் மேனேஜ்மெண்ட் அரசியலை மக்கள் கவனித்து வருகிறார்கள்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.,”
நடுத்தர வர்க்கத்தினருக்கு அடுத்த அடி – ராகுல் காந்தி
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
