இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிங்கப்பூரில் புதிய கிரிக்கெட் அகாடமி ஒன்றினை தொடங்கி உள்ளார்.
இந்திய அணியின் முன்னணி கேப்டன் தோனி இந்திய அணிக்காக பல்வேறு வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி பல்வேறு கோப்பைகளைக் கைப்பற்றியுள்ளது. எனவே அதிகளவில் ரசிகர்களைக் கவர்ந்த தோனி கிரிக்கெட் அகாடமி நிறுவியுள்ளது பல்வேறு தரப்பு ரசிகர்களையும் கவனம் ஈர்த்துள்ளது. இந்திய அணியின் முன்னணி வீரர்களான ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் இந்தியாவில் ஏற்கனவே கிரிக்கெட் அகாடமியை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த நவம்பர் மாதம், துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஆக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து அந்நாட்டில் தோனி, எம்.எஸ்.தோனி கிரிக்கெட் அகாடமி என்ற பெயரில் புதிய அகாடமியை தொடங்கினார். அதன் பின்னர் சிங்கப்பூரில் உள்ள செயின்ட் பாட்ரிக் பள்ளியில் புதிய கிரிக்கெட் அகாடமியை நேற்று (ஜனவரி 20) தொடங்கியுள்ளார்.
நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் ரிப்பன் வெட்டி பயிற்சி மையத்தை தோனி தொடங்கி வைத்தார். விழாவில் கலந்து கொண்ட அவர் **தற்போதுள்ள இளம் தலைமுறை பலனை எதிர்பார்த்து செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் செயல்பாட்டினை மறந்து விடுகிறார்கள். நல்ல செயல்பாடுகள் மற்றும் கடுமையான முயற்சி நல்ல பலனை தரும்** என்று பேசினார்.
