இருபது வளரும் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட உலக சில்லறை வர்த்தக வளர்ச்சிப் பட்டியல் ஆய்வில், தொழில் தொடங்க ஏற்ற நாடாக இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது. இதே பட்டியலில் கடந்த முறை 14-வது இடத்தில் இந்தியா இருந்தது. தொடர்ந்து வளர்ந்து வரும் ஜிடிபி (உள்நாட்டு மொத்த உற்பத்தி) விகிதம் காரணமாக, 13 இடங்கள் முன்னேறி தற்போது இரண்டாம் இடத்தை நம் நாடு பெற்றுள்ளது. 2015-16 நிதியாண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான இறுதிக் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.9 சதவிகிதமாகப் பதிவானது. இதன் காரணமாக உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா இடம் பிடித்தது. மேலும் சில்லறை வர்த்தக வளர்ச்சி விகிதம் 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 8.8 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதிதாக தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னணியில் இடம் பிடித்துள்ளது.
தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் – இந்தியாவுக்கு இரண்டாமிடம்
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
