தேசிய கோபால் ரத்னா விருது-2024

Published On:

| By Minnambalam Login1

current affairs tamil Gokul Awards

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம் இந்தாண்டிற்கான தேசிய கோபால் ரத்னா விருதுக்கான பரிந்துரைகளை வரவேற்கிறது. current affairs tamil Gokul Awards

இந்த அமைச்சகம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையை மேம்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கையை நிலைநிறுத்தப் பல முயற்சிகள் செய்துவருகின்றன.

அதில் ஒன்று தான், 2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட “தேசிய கோகுல் திட்டம்” (Rashtriya Gokul Mission). இதன் நோக்கம், இந்தியாவின்  உள்நாட்டு மாட்டு இனங்களைப் பாதுகாப்பது.

இந்த திட்டத்தின் ஓர் அங்கம்தான், தேசிய கோபால் ரத்னா விருது. இந்த விருது 2021 இல் இருந்து, விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக வழங்கப்பட்டு வருகிறது. current affairs tamil Gokul Awards

விருது வழங்கப்படும் பிரிவுகள்:

  • நாட்டுமாடு அல்லது எருமைகளை வைத்துச் சிறப்பாக பால் பண்ணையை நடத்தும் பால் பண்ணையாளர்.
  • சிறந்த பால் கூட்டுறவுச் சங்கம்.
  • சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர் .

கூடுதலாக, இந்தாண்டிலிருந்து வடகிழக்குப் பகுதிக்கான சிறப்பு விருது வழங்கப்படவிருக்கிறது. இது அந்தப் பகுதி பால்வளத்தை மேம்படுத்துவதற்காக.

முதல் இரண்டு பிரிவுக்குப் பரிசுத் தொகை விவரம்:

  • முதல் பரிசு ஐந்து லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு மூன்று லட்சம் ரூபாய், மூன்றாம் பரிசு இரண்டு லட்சம் ரூபாய்.
  • வடகிழக்குப் பகுதிக்கான விருது, இரண்டு லட்சம் ரூபாய்.
  • செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநருக்குப் பரிசுத்தொகை கிடையாது.

தேசிய கோகுல் திட்டம்:

  • இந்தத்திட்டம் 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
  • உள்நாட்டு மாட்டு இனங்களைப் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதுதான் இதன் குறிக்கோள்.
  • மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் கீழ் வருகிறது இத்திட்டம்.
குறிக்கோள்கள்;
  1. மாடுகளின் பால் உற்பத்தித்திறனைத் தொழில்நுட்ப உதவியுடன் அதிகப்படுத்துவது.
  2. நாட்டு மாடு மற்றும் எருமை வளர்ப்பை அறிவியல்துணையுடன் பாதுகாப்பது.
  3. தரமான மரபணுக்கள் உள்ள காளைகளை இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்துவது.
சில முக்கிய முயற்சிகள்:
  • கோபால் ரத்னா விருதுகள்
  • காமதேனு விருதுகள்
  • கோகுல் கிராமங்கள்
  • தேசியக் காமதேனு இனப்பெருக்க மையம்

சில முக்கியமான புள்ளிவிவரங்கள்:

  1. பால் பொருட்கள்தான் இந்திய விவசாய உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. எட்டுக் கோடி விவசாயிகள் பால்வளத்துறையை நம்பி இருக்கிறார்கள்.
  2. உலகிலேயே இந்தியா தான் பால் உற்பத்தியில் முதல் இடம். ஏறத்தாழ 23 சதவீதப் பால் உற்பத்திக்கு இந்தியாதான் காரணம்.
  3. முட்டை உற்பத்தியில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்திலும், இறைச்சி உற்பத்தியில் எட்டாவது இடத்தில் உள்ளது.

மாணவர்களுக்கான குறிப்பு :

  • UPSC Civil Service GS 3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
  • UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
  • விவசாயம் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

-அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

சிபிஐக்கு எதிராக மேற்கு வங்காளம் தொடுத்த வழக்கு ஏற்கத்தக்கது!!

உலகின் மிகப்பழமையான குகை ஓவியம்

புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share