ADVERTISEMENT

தேசிய கீதம், தேசிய கொடிக்கு அவமதிப்பா? அதிரடி உத்தரவு

Published On:

| By Balaji

அண்மைக்காலமாக தேசபக்தியை காரணமாக வைத்துக் கொண்டு தேசிய கீதம், தேசியக் கொடி குறித்த விவகாரங்களில் மத்திய அரசு தலையிட்டு வரும் நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், தேசிய கீதத்துக்கும், தேசிய கொடிக்கும் அவமதிப்பு ஏற்படுத்தும் நிகழ்வுகள் தொடர்ந்து வருவதாக, மத்திய அரசுக்கு, பல தரப்பில் இருந்தும் புகார்கள் சென்றுள்ளன.

இவற்றின் கவுரவம் பாதுகாக்கப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பான சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். விதிகளை மீறுவோருக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share