தலைமைச் செயலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் சங்கத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று (ஜூலை 18) முதல்வர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு, “தமிழகத்தில் தற்போது எங்கும் தண்ணீர் இல்லை. 100 ஏக்கரில் 90 ஏக்கர் நிலம் வரண்டு போய்விட்டது. அதனால் முதலமைச்சரை சந்தித்து மனுக் கொடுக்க வந்தோம்” என்று தெரிவித்தார்.
தண்ணீரின்றி வாடும் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிய அய்யாக்கண்ணு, “கடலூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களை சார்ந்த விவசாயிகள் 14 லட்சம் டன் கரும்புகளை சர்க்கரை ஆலைகளுக்கு கொடுத்து 30 மாதங்கள் ஆகிவிட்டது, ஆனால் விவசாயிகளுக்கு இன்னும் நிலுவைத் தொகை வரவில்லை. இதுகுறித்து சென்ற மாதம் முதலமைச்சரை சந்தித்து உதவி கோரினோம். பத்து நாட்களில் உதவி அளிப்பதாக தெரிவித்தார். ஆனால் இன்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று அதிருப்தி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாகக் கூறி காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது விவசாயிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
**
மேலும் படிக்க
**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**
,”





