டி-20 கிரிக்கெட் – இந்தியாவை வாழ்த்தி மணற்சிற்பம்!

Published On:

| By Balaji

6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், குரூப்2 பிரிவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மொகாலியில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பிரதான எதிரியான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இவ்விரு அணிகளும் தலா 2 வெற்றி, ஒரு தோல்வி என்று 4 புள்ளிகளுடன் சமநிலை வகிப்பதால் இதில் வாகை சூடும் அணி இந்த பிரிவில் இருந்து 2-வது அணியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். தோற்கும் அணி உலக கோப்பையை விட்டு வெளியேறும். அதனால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்னாயக் ஒரிசாவின் பூரி கடற்கரையில் முன்னேறு இந்தியா என்ற எழுச்சிமிக்க வாசகத்துடன் மணர்சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share