டிஎன்பிஎஸ்சி: தோட்டக் கலைப் பதவிக்கான தேர்வு ரத்து!

Published On:

| By Balaji

தோட்டக் கலைப் பதவிக்கான எழுத்துத் தேர்வை ரத்து செய்வதாக டிஎன்பிஎஸ்சி நேற்று (பிப்ரவரி 20) அறிவித்துள்ளது.

2017 நவம்பர் 28ஆம் தேதி தோட்டக்கலைத் துறையில் உதவி இயக்குநர் (100), தோட்டக்கலை அலுவலர் (30) என 130 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்தத் தேர்வை நடத்தச் சரியான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்வை ரத்துசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

டிஎன்பிஎஸ்சி செயலாளர் விஜயகுமார், “தமிழகத் தோட்டக் கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக் கலை அதிகாரி பதவிக்கு, பிப்ரவரி 24 மற்றும் 25ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்தத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share