ADVERTISEMENT

சேலை டிரெண்டிங்கில் பெண் அரசியல் பிரமுகர்கள்!

Published On:

| By Balaji

சேலை டிரெண்டிங்கில் இந்திய பெண் அரசியல் பிரமுகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு சில ட்விட்டர் கணக்கர்கள், புடவை அணிந்த தங்களது புகைப்படங்களை #sareetwitter என குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

சேலை டிரெண்டிங்கில், பாலிவுட் நடிகைகள், அரசியல் பிரபலங்களான நக்மா, பிரியங்கா காந்தி, பாஜக நுபுர் சர்மா, பிரியங்கா சதுர்வேதி என பல அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டு பெண்களும் இதில் ஆர்வமாக பங்கேற்று வருகின்றனர். “புடவையை நாங்கள் விரும்புகின்றோம். புடவை கட்டுவதை பெருமையாக கருதுகிறோம்” என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “திருமணத்தின் காலை நேர பூஜையின் போது” என 22 வருடங்களுக்கு முன் எடுத்த, புடவை அணிந்திருக்கும் தனது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கூடவே sareetwitter என்ற ஹாஷ்டாக்கையும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்த sareetwitter ஹாஷ்டாக்கில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும், குழந்தைகளும் புடவை அணிந்த தங்களது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். பாலிவுட் நடிகரான ஆயூஷ்மான் குரானா புடவை அணிந்த புகைப்படத்தை ட்விட்டரில் இன்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்த sareetwitter குறித்து Israel in India என்ற ட்விட்டர் கணக்கில், “புடவை பெண்களை அழகாக்குகிறது என்பதில் சந்தேகமே இல்லை” என்று இஸ்ரேல் நாட்டு பெண்கள் சேலை அணிந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share