கடந்த 1925ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேசத்தில் பிறந்த சி.எஸ்.என்.பட்நாயக், 1955ஆம் ஆண்டு சென்னை கவின் கலைக் கல்லூரியல் ஓவியத்துறையில் டிப்ளமோ பட்டம் பெற்றவர். FRESCO எனப்படும் ஓவியக்கலையில் சிறந்து விளங்கியவர். 1957 முதல் 1977ஆம் ஆண்டு வரை டெல்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவில், சிற்பங்கள் ஆராய்ச்சியில் இடம்பெற்றவர்.
1974ஆம் ஆண்டு சிற்பக் கலைகளின் உயரிய விருதான **மிதுனா** விருதைப் பெற்றவர்.

1975ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேசத்தில், லலித் கலா அகாடமியின் விருதையும், 1977ஆம் ஆண்டு இவரது வெண்கலச் சிற்பங்கள் மூலம் மற்றொரு விருதையும் பெற்றவர்.
அதுமட்டுமின்றி 1998 முதல் 1991ஆம் ஆண்டு வரை கலை மற்றும் கைவினைப் பொருட்கள் சமூகம், ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஹங்கேரி, புல்காரியா ஆகிய நாடுகளில் நடத்திய கண்காட்சிகளில் இவரது சிற்பங்கள் இடம்பெற்றன.










