சென்னையில் நள்ளிரவில் சொகுசு கார் விபத்து: இளைஞர் காயம்!

Published On:

| By Balaji

சென்னை நுங்கம்பாக்கத்தில் சொகுசு கார் மோதியதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த இளைஞர் பலத்த காயமடைந்தார். இந்த காரில் நடிகை யாஷிகா ஆனந்த் நண்பர்களுடன் வந்ததாக சொல்லப்படுகிறது.

வார இறுதி நாட்கள் வந்துவிட்டால் சாலையோர மக்களுக்கு இந்த பயமும் சேர்ந்து வந்துவிடுகிறது. செல்வாக்கு மிக்கவர்கள் வீக் என்ட் பார்ட்டி என்ற பெயரில் கொண்டாடிவிட்டு மீண்டும் வீடு திரும்பும் போது அதிவேகத்தில் காரை இயக்குகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் விபத்து ஏற்படுத்துபவர்கள் மீது பெரிதாக நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகின்றது.

ADVERTISEMENT

நேற்று (அக்டோபர் 5) நள்ளிரவு உணவை டெலிவரி செய்யும் பரத் என்பவர் நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலை ஓரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த ‘ford mustang GT’ என்ற சொகுசு கார் அதிவேகமாக வந்து பரத் மீது மோதியிருக்கிறது. படுகாயமடைந்த பரத், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் அருகில் இருந்த கடை ஒன்றும் சேதமடைந்துள்ளது. கார் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

விபத்தை நேரில் பார்த்தவர்கள், காரில் இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் வந்ததாகவும், விபத்து நடந்தவுடன் அந்த பெண் சம்பவ இடத்தில் இருந்து சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்தும் காரில் இருந்ததாக சொல்லப்படுகிறது. காரில் இருந்தவர்கள் மது அருந்தியிருந்ததாகவும் சொல்கிறார்கள்.

2016ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற படம் மூலம் அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். பின்னர் தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் பிரபலம் ஆனார். தற்போது இவன் தான் உத்தமன், ராஜா பீமா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.,”

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share