‘சூப்பர் ஹீரோ அல்ல; பேப்பர் ஹீரோ’ – நடிகர் ராமராஜன் விமர்சனம்

Published On:

| By Balaji

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சுமைதாங்கி ஏழுமலையை ஆதரித்து நேற்று அதிமுக-வின் பேச்சாளர் நடிகர் ராமராஜன் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர், ‘திமுகவின் தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் சூப்பர் ஹீரோ என்று கூறுகிறார். அது சூப்பர் ஹீரோ அல்ல; பேப்பர் ஹீரோ’ என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், ‘பதினெட்டு ஆண்டுகள் எம்பி-யாக இருந்தவர், மூத்த வழக்கறிஞர் என்று இருந்த மதிமுக வைகோ இன்று விஜயகாந்த்தின் பின்னால் போவது கேவலம்’ என்று விமர்சித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share