‘‘ஸ்டார்ட் மீசிக்’’ – அம்மா மனுவை பரிசீலனை பண்றாங்கன்னு சொல்றாங்க. ஆனா, ஒரு போட்டோகூட வரமாட்டேங்குதுன்னு அதிமுக தொண்டர்கள் கவலைப்பட்டாங்கன்னா, ‘‘என்னாடா ஏற்கனவே தனியா இருக்கோம். இதில, அழகிரி வேற எண்ட்ரியைக் கொடுக்கிறாரு’’ன்னு ஸ்டாலின் தரப்பு திமுக-வினர் டர்ராகி கிடக்கிறாங்க. ஆனா, எது எப்படி நடந்தாலும் இணைய சண்டை நடந்துக்கிட்டுதான் இருக்கு. அதிமுக, திமுக ஆதரவு முகநூல்வாசிகளின் சாம்பிள் ஸ்டேடஸ்கள் கீழே.
// நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
20 hrs ·
தமிழகத்தில் விஜயகாந்தின் தலைமையில் மீண்டும் அண்ணாவின் ஆட்சி – வைகோ
:>>விஜயகாந்த் வார்த்தையிலே சொல்லனுமின்னா …இதெல்லாம் எவ்வளவு கேவலம் தெரியுமா மக்களே” //
//
Umamaheshvaran Panneerselvam
ம.ந.கூ-வில் சிலர் பேசும் ரெகுலர் டெம்லேட்.
1. 26688வருஷ திமுக தொண்டரே என்னிடம் வந்து “வைகோ வாழ்க என்று சொன்னார்”
2. தி.க. ஆட்கள் எனக்கு ஃபோன் செய்து கலைஞர் வேஸ்ட்டு, வைகோ தான் பெஸ்ட்டு என்று சொன்னார்கள்.
3. ஜெயா ஆதரவாளர் ரகசியமாக என்னிடம் சொன்னது “நாங்கள் பயப்படுவது உங்களுக்கு மட்டுமே.” என்றார்கள்.
4. திமுக-வே எங்களை கூட்டணிக்கு அழைத்தது
5. கிராமத்துப் பெண்கள் தண்ணீர் பிடிக்கும்போது “ம.ந.கூ-தான் வெல்லும்” என்று விரலசைத்து டாட்டா காட்டினார்கள்.
6. சுவற்றில் கருப்பு சிவப்பு பெயிண்ட் இருந்தது. அப்பொழுது ஒரு மாற்றுத்திறனாளி வந்து அதை முழு சிவப்பு ஆக்கினார்..கம்மியுனிசம் திராவிட முதலைகளை வீழ்த்தத் தொடங்கியிருக்கிறது!!!!!!!
7. கேப்டனுடன் கூட்டணி வைத்தவுடன் எனக்கு லீ க்வான் யூ ஆவி ஃபோன் செய்தது…. லீ யின் ஆசி பெற்றவர் கேப்டன் என்று பெரியாரின் ஆவியே கூறியது.
8. இந்தோனஷியாவில் எங்கள் வாக்கு வங்கி 69%
9. யேசு அழைக்கிறார். ம,நகூ…அல்லலேலுஹ்யா
10. நாடி ஜோதிடம் பார்க்கப்போன ம,ந.கூ தலைவர் ஒருவருக்கு ” அன்புள்ள தமிழக முதல்வரே” என்று ஓலை வந்தது !!! அகத்தியரே ம.ந.கூ-வுக்கு ஆதரவு!!!
11. ராஜிவ் காந்தி , மதர் தெரசா விரும்பிய கூட்டணி ம.ந.கூ.
12. கலைஞரே ஸ்டாலின் மேலுள்ள கோவத்தால் ம.ந.கூ-வுக்கு ஓட்டுப்போட்டார்
13. ஸ்டாலின் ஓட்டுப் போட்டது முத்தரசனுக்கே
14. எவனொருவன் ம.ந.கூ-வுக்கு வாக்களிக்கிறானோ அவனே சத்யமும், ஐ நாக்ஸுமாக இருக்கிறான். பரலோக சாம்ராஜ்ஜியம் கேப்டன் தலைமையில் அமையும்
யோவான் 46:78
இதே ரேஞ்சில்தான் பேசுகிறார்கள்.//
****************************************************************************
Natarajan Kulanthaivelu
விஜயகாந்த்கிட்ட
????இனப்படுகொலை எப்போ நடந்ததுன்னு கேளு.
????கெயில்ன்னா என்னனு கேளு.
????டெல்டா மாவட்டங்கள்னா எந்த எந்த மாவட்டம்னு கேளு.
????கூடங்குளம் அனுமின்நிலையம் வேணுமா வேணாமான்னு கேளு.
????பென்னிகுயிக் எந்த அணைய கட்டுனார்னு கேளு.
????தமிழ்நாட்ல மொத்தம் எத்தனை மாவட்டம்னு கேளு.
????அதில் புதுசா எந்த மாவட்டம் உருவாகி இருக்குனு கேளு.
????பெருச்சித்திரனார்னா யாருனு கேளு.
????நியூட்ரினோனா என்னனு கேளு.
????திராவிடம்னா என்னனு கேளு.
????அது யாரு உருவாக்கினானு கேளு.
????தமிழ் முத்திரையில் இருக்கிற கோபுரம் எந்த ஊர்னு கேளு.
????தமிழ்நாடுனு யார் பெயர் வச்சதுனு கேளு.
????அஞ்சு திருக்குறள் பார்க்காம சொல்லச் சொல்லி கேளு.
????அதுக்கு அர்த்தம் என்னனு கேளு.
????பாரதியார் எந்த ஊர்னு கேளு.
????சோழன் கொடி என்னனு கேளு.
????விவசாயம் அழிந்து போனதுக்குக் காரணம் என்னனு கேளு.
????நாட்டு மாடு எப்படி இருக்கும்னு கேளு.
????தமிழ்நாட்டுக்கு அடிப்படை வசதி இப்போ என்னனு கேளு.
????நீர் மேலாண்மைன்னா என்னனு கேளு.
????தமிழ்நாட்டில் எத்தனை ஏரி இருக்குனு கேளு.
????எதிர்க்கட்சித் தலைவரா இருந்து சட்டமன்றத்தில் ஒரு கேள்விகூட கேட்காத தலைவர்
????இவரு தமிழக முதல்வரானால் …..
????மக்கழே …………..
***********************************************************************************************
இது இல்லாமல் அழகிரி திடீரென கலைஞரைச் சந்திக்கவும், அந்த மேட்டர் ட்விட்டரில் ட்ரெண்டானது. இந்தச் சந்திப்பு குறித்து ஸ்டாலின் சொன்ன கருத்தை வைத்து செமையாக கலாய்த்தனர்.
// @senthilcp
கருணாநிதி-அழகிரி சந்திப்பில் அரசியல் இல்லை- ஸ்டாலின்# அரசியல் இல்லைனு சொல்லலை. இல்லாம இருந்தா நல்லதுன்னு சொல்ல வர்றேன் //
// @rajesh_off
ஒரு நியுஸ் சேனல்கூட அதிமுக-வைப் பற்றியும் அமைச்சர்கள் ஊழல்கள் பற்றியும் ஒரு நியுஸ்கூட இல்ல
அழகிரி வந்து கலைஞர் பார்த்த flashnewsல போடறாங்க //
// @devimagan
“ஹோலி” பண்டிகை அதுவுமா ஸ்டாலின் முகத்துல கரியப் பூசிட்டு போயிட்டப்ல “அழகிரி”..,,. //
//@sarathi30
கூட்டணிக்கு யாரும் வரலைன்னதும் தலைவர் அழகிரிகூட கூட்டணி பேச்சுவார்த்தைய தொடங்கிவிட்டார்போல, இதாம்ல ராசதந்திரம் //
-லாக் ஆஃப்,”
