நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க யோகா உதவுகிறது. இது இந்திய மரபில் உருவான ஒரு உடற்பயிற்சி மட்டுமல்ல, ஆன்மீக விழுமியங்களுடன் கூடிய போதனை முறையும் ஆகும். பிரதமர் மோடி பதவியேற்ற பின்னர் யோகா தினத்திற்கு அங்கீகாரம் வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையிடம் கேட்க சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தையொட்டி ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இது,
………..
இந்த வருடம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் (UN), ஜுன் 20, 21 ஆகிய நாட்களில் இரண்டாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் தலைமையில் ‘நிலையான வளர்ச்சிக்கு யோகா’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் யோக பயிற்சிகளும் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற உள்ளன.
இம்மாதம் தமிழ்நாடு மற்றும் சென்னையில் சுமார் 11,500 தன்னார்வ யோகா ஆசிரியர்கள் மூலம் 6,000 பள்ளிகளுக்கும், அரசு மற்றும் பொது நிறுவனங்களுக்கும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் இதுவரை 4,500 தன்னார்வ தொண்டர்களுக்கு யோகா ஆசிரியர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்றவர்கள், சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இம்மாதம் முழுவதும் சென்னை மாநகர மக்களுக்கு இலவச யோகா பயிற்சியை கற்பிக்க உள்ளார்கள். இதற்கான விழா சத்குரு அவர்களின் தலைமையில் YMCA மைதானம், ராயப்பேட்டையில் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு சத்குரு அவர்களுடன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. அனைத்து ஊடக நண்பர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
நாள் : 05.06.2016 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: நண்பகல் 12 மணி
இடம் : YMCA மைதானம், ராயப்பேட்டை, சென்னை.
தொடர்புக்கு: 9489045105, 9442641563, 8903816461
