ADVERTISEMENT

கேரளா: மொத்த சம்பளத்தையும் வழங்கும் பூனம் பாண்டே

Published On:

| By Balaji

பிரபல கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே கேரள வெள்ள நிவாரண நிதியாக தான் நடித்துவரும் படத்தின் மொத்த சம்பளத்தையும் வழங்கவுள்ளார்.

தனது கவர்ச்சிகரமான நடிப்பால் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை பூனம் பாண்டே. கவர்ச்சிக்கு மட்டுமல்ல சர்ச்சைகளுக்கும்கூட பெயர் போனவர் இவர். இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்பார். முக்கால் நிர்வாணப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளுவார். ஒருமுறை ஒரு படி மேலேயே போய் தனது கவர்ச்சிப் புகைப்படங்களை ரசிகர்கள் பாரக்கவேண்டும் என்னும் நோக்கத்தில் தனது பெயரில் புது அப்ளிகேஷனையே வெளியிட்டார்.

ADVERTISEMENT

ஆனால் கூகுள் என்ன நினைத்ததோ தெரியவில்லை அந்த அப்ளிகேஷனையே பட்டியலிலிருந்து நீக்கிவிட்டது. “கூகுளில் இதுபோல பல அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. ஆனால் கூகுள் ஏன் என்னுடைய அப்ளிகேஷனை நீக்கியது எனத் தெரியவில்லை. இன்னொரு பக்கமோ இதில் எதிர்பார்த்த அளவுக்கு நீங்கள் கவர்ச்சி காட்டவில்லை என ரசிகர்கள் புகார்வேறு கூறுகிறார்கள். இதை எப்படி எடுத்துக் கொள்வது எனத் தெரியவில்லை” என அதற்கு கூலாகவும் பதிலளித்தார்.

தான் பரபரப்பாக அறியப்படவேண்டும் எனும் காரணத்திற்காக சர்ச்சைகளை தானே உருவாக்குவதாகவும்கூட தடாலடியாகக் கூறுபவர் பூனம்.

ADVERTISEMENT

இப்படியாக அறியப்படும் பூனம் பாண்டே, தற்போது செய்துள்ள செயல் தற்போது அவருக்கு வேறொரு முகத்தை ரசிகர்களுக்கு அறியத் தந்திருக்கிறது எனலாம்.

ADVERTISEMENT

சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சிக்கித் தவிக்கும் கேரளாவுக்கு பலரும் நிவாரண நிதிகளை வழங்கிவருகின்றனர். பல சினிமா பிரபலங்களும்கூட நிவாரணத் தொகையை வழங்கிவருகின்றனர். தற்போது இதில் பூனமும் இணைந்துள்ளார்.

அந்தவகையில் தற்போது தெலுங்கில் தான் நடித்துவரும் லேடி கப்பார் சிங் படத்தில் தனக்குக் கிடைக்கும் மொத்த சம்பளத்தையும் கேரள நிவாரணமாக வழங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார் பூனம். இதனால் அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர்.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share