குடும்ப வன்முறை : பெண்களுக்கு ஆலோசனையோடு ஃபேஸியல்!

Published On:

| By Balaji

வரதட்சணை பிரச்னையால் வரும் பெண்களுக்கு ஆலோசனை வழங்குவதோடு, அவர்களும் அழகு என்பதை தெரிவிக்கும்வகையில் அப் பெண்களுக்கு ஃபேஸியல் செய்துவிடுகிறோம் என பெண்ணியவாதிகள் தெரிவிக்கின்றனர்.

மகாராஷ்டிராவில் பனிரெண்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் ‘இந்தியாவில் நிலவும் சமூகப் பிரச்னைகள்’ என்ற தலைப்பில் ‘பெண் அசிங்கமாகவோ அல்லது மாற்றுத் திறனாளியாகவோ இருந்தால், அவருக்கு மிக எளிதில் திருமணம் ஆகாது. அதனால், மணமகன் வீட்டார் அதிகளவில் வரதட்சணை கேட்பார்கள். தன் பெண்ணுக்கு திருமணம் ஆக வேண்டும் என்பதற்காக, பெண் வீட்டாரும் அவர்கள் கேட்கும் வரதட்சணையை கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்’ என்று குறிப்பிட்டிருந்தது. இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இந்நிலையில், தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் பல பெண்ணியவாதிகள், பெண்களுக்கு ஆலோசனை கொடுப்பதோடு, அவர்களுக்கு ஃபேஸியல் செய்வதற்காக அழகு நிலையம் தொடங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரித்து என்ற பெண்ணியவாதி கூறுகையில், ‘நாங்கள் வரதட்சணையால் பல கொடுமைகளை அனுபவித்துவரும் பெண்களுக்கு ஆலோசனை கொடுக்கிற நேரத்தில், ஃபேஸியலும் செய்து விடுகிறோம். தற்போது, நான் அழகு நிலையம் அமைப்பதற்காக அமேசான் மற்றும் நல்ல இணையதள விற்பனையாளர்களைத் தேடி வருகிறேன். இதன்மூலம், நாட்டில் பாலினம்சார்ந்த வன்முறைகளைத் தவிர்க்க முடியும் என்று கருதுகிறேன். இதுபோன்று, மற்ற பெண்ணியவாதிகளும் பெண்களுக்கு உதவிசெய்யும் நோக்கில் இருக்கின்றனர். பெண்களை அழகாக மாற்றுவதில் அவர்களுக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லை. இதுமட்டுமல்லாமல், அமித் ஷாஜி என்பவர் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது, அவர்களைக் காப்பாற்ற ஒரு குழுவை உருவாக்கியுள்ளார்’ என்று கூறினார்.

ADVERTISEMENT

இதுகுறித்து மாலினி என்பவர் கூறுகையில், ‘எனக்கு வயது 20 ஆகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் தொடர்ந்து கணினியில் வேலை பார்க்கிறேன். அதனால், என் கண்களில் ஏற்படும் கருவளையங்களைத் தவிர்ப்பதற்காக தொடர்ந்து வெள்ளரிக்காய்த் துண்டுகளை வைத்துக்கொள்கிறேன். ஏனென்றால் அதனால் ஏற்படும் பாதிப்பால், என் தந்தை அதற்காக, அதிகளவில் வரதட்சணை கொடுக்க வேண்டியதாகும்’ என்று கூறினார்.

அலோக் என்பவர், ‘நான் காதல் திருமணம்தான் செய்வேன். எந்தப் பெண் என்றாலும் எனக்கு ஓ.கே.தான். மேலும் முகநூலில் அனைத்துப் பெண்களுக்கும் ஐ லவ் யூ என்று அனுப்புவேன்’ என்று முன்பு ஒரு காலத்தில் கூறினார். ஆனால் இந்த விஷயங்கள் இப்போது என்னைப் போன்ற மக்களுக்கு மிகவும் கடினமாக மாறிவிட்டன. இப்போது அந்த அலோக், ‘வீட்டில் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன். காதல் திருமணம் என்றால் பெண் வீட்டாரிடம் அதிகளவில் வரதட்சணை கேட்க முடியாது. ஆனால் அதே நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின்மூலம், ஒரு அசிங்கமான பெண்ணை காப்பாற்றுகிறேன் மற்றும் நானும் வருமானம் பெறுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மகாராஷ்டிரா பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த கருத்துகள் சர்வதேச அளவில் கவனப்பட்டிருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share