கிண்டியில் தீப்பிடித்து எரிந்த தனியார் கல்லூரி பேருந்து

Published On:

| By Balaji

சென்னை கிண்டியில் நேற்று காலை வழக்கம்போல், பல்வேறு பகுதியிலிருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, சின்னமலை அருகே இன்ஜினில் இருந்து திடீரென்று புகை வருவதை, பேருந்து ஓட்டுநர் கவனித்தார். இதையடுத்து பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த ராஜ்பவன் மற்றும் கிண்டி பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சுமார் அரைமணி நேர போராட்டத்துக்குப்பின் தீயை அணைத்தனர். மாணவர்கள் பத்திரமாக வேறு பேருந்தில் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share