கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – எது சிறந்த பிரியாணி?

Published On:

| By Balaji

ஊரடங்கு நேரத்தில் ஏதோ சாப்பிட கிடைக்கிறதே என்கிற நிலை இருந்தாலும் பிரியாணிக்கு என்று தனி மவுசு உண்டு. சரி, எது சிறந்த பிரியாணி என்று யோசிக்கலாமா?

‘பிரியாணி என்றால், அதில் ஒரு வாய் எடுத்து சாப்பிடும்போதே நாவில் நீர் வரவழைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பிரியாணியே சிறந்த பிரியாணி என்பதற்கான அடையாளம்’ என்கிறார்கள் சமையற்கலைஞர்கள்.

ADVERTISEMENT

**தரமான அரிசியைக் கண்டறிவது எப்படி?**

பிரியாணி அரிசி, நல்ல அரிசி என்பதற்கான அறிகுறி, அதிலிருந்து வரும் வாசனை, சிக்கன் அல்லது மட்டனின் வாசனையைவிடத் தூக்கலாக இருக்க வேண்டும். நல்ல பாஸ்மதி அரிசியின் வாசனை, அற்புதமாக இருக்கும். அதுவே சரியில்லாத அரிசியா இருந்தால், நம்மைச் சுண்டி இழுக்காது. நல்ல வாசனையுடன் கூடிய பாஸ்மதி அரிசி எல்லா கடைகளிலும் கிடைக்கும். அதை வாங்கிப் பயன்படுத்தலாம். இல்லாவிட்டால், நம் ஊர் உற்பத்தியான சீரகச் சம்பா அரிசியையும் பிரியாணி தயாரிக்கப் பயன்படுத்தலாம்.

ADVERTISEMENT

இரண்டு மாதத்துக்கு ஒருமுறை, மாதத்துக்கு ஒருமுறை பிரியாணி செய்வதால், நல்ல அரிசியைப் பயன்படுத்தினால், மிகவும் சுவையாக இருக்கும்.

**பிரியாணிக்கு ஏற்றது டேபிள் சால்ட்டா? கல் உப்பா?**

ADVERTISEMENT

டேபிள் சால்ட்டைவிட கல் உப்புதான் நல்லது. நம் கிராமங்களில் டேபிள் சால்ட் அதிகம் பயன்படுத்த மாட்டார்கள். அவர்களுக்கு அளவு பார்த்துப்போட கல் உப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள். கல் உப்பைப் பயன்படுத்தும்போது உள்ள சுவை தனியாகத் தெரியும்.

பிரியாணி மட்டுமல்ல… ஆவக்காய், மாங்காய் போன்றவற்றை ஊறுகாய் போடும்போது கல் உப்புதான் போடுவார்கள். அவற்றைக் கலந்துவைக்கும்போது வரும் மணமே தனி. ஒரு சிறு துண்டு எடுத்து வாயில் போட்டால் அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். ஆகவே, கல் உப்புதான் நல்லது.

**‘பிரியாணிக்கு தயிர் சேர்த்த ரைத்தா சேர்த்துச் சாப்பிடக் கூடாது’ என்கிறார்கள். தயிரில்லாமல் ரைத்தா தயாரிக்க வழியுண்டா?**

தயிரில்லாமல் ரைத்தா சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கி அதில் எலுமிச்சைப்பழம் பிழிந்து, சிறிதளவு உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். இது பிரியாணிக்குத் தனிச்சுவையைத் தரும் சைடிஷாக அமையும்.

[நேற்றைய ரெசிப்பி: வெள்ளரி தேங்காய்ப்பால் சாலட்](https://minnambalam.com/k/2020/05/09/3)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share