காட்டு யானைகளின் சேட்டை: வனத்துறையினருடன் கைகோத்த இளைஞர்கள்!

Published On:

| By Balaji

கூடலூர் அருகே காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க வனத்துறையினருடன் இளைஞர்கள் கைகோத்து, தீ மூட்டி காவல் காத்து வருகின்றனர்.

ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தொரப்பள்ளி, குனில்வயல், ஏச்சம்வயல், வடவயல், ஸ்ரீமதுரை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் வனப்பகுதியையொட்டி உள்ள அகழிகளை ஆழப்படுத்த வேண்டும் என்று வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி அகழிகளை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஆனாலும் அகழி இல்லாத பகுதி வழியாக கிராமங்களுக்குள் காட்டுயானைகள் நுழைந்து விடுகின்றன.

ADVERTISEMENT

இதையொட்டி காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க வனத்துறையினருடன் இணைந்து அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இரவில் காவல் காத்து வருகின்றனர். குளிரையும் பொருட்படுத்தாமல் தீ மூட்டி காவலில் ஈடுபடு கின்றனர்.

இதுகுறித்து பேசிய இளைஞர்கள்,“ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்தாலும் காட்டு யானைகள் நடமாட்டம் மட்டும் குறைவதே இல்லை. அகழிகளை ஆழப்படுத்தினால், அகழி இல்லாத பகுதி வழியாக ஊருக்குள் வருகின்றன. இல்லையென்றால் ஆழம் குறைவான அகழியைக் கடந்து ஊருக்குள் நுழைகின்றன.

ADVERTISEMENT

வனத்துறையினரால் அனைத்து இடங்களிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட முடியவில்லை. இதன் காரணமாக வனத்துறையினருடன் கைகோத்து நாங்களும் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்” என்று அவர்கள் கூறினர்.

**-ராஜ்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share