ஓடும் காரை மறித்து தங்கம் கொள்ளை… கோவைக்கு வந்த வழியில் பட்டப்பகலில் துணிகரம்!

Published On:

| By Kumaresan M

திருச்சூரில் இருந்து கோவைக்கு காரில் கொண்டு வரப்பட்ட 2.5 கிலோ தங்கம் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அருண் சன்னி தங்க வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று   தனது நண்பர் தாமஸுடன் கோவைக்கு காரில் 2.5 கிலோ தங்கத்தை கொண்டு வந்து கொண்டிருந்தார்.

அவரை பின் தொடர்ந்து மூன்று கார்களில் வந்த கும்பல் ஒன்று குதிரன் சுரங்கப் பாதை அருகே அருண் சன்னியின் காரை வழிமறித்து நிறுத்தியது. கொள்ளையர்கள் அனைவரும் முகமூடி அணிந்திருந்தனர். பின்னர், தங்கம் இருந்த காரில் இருந்தவர்களை இறங்க சொன்னார்கள். இறங்க மறுத்ததால் , சுத்தியல் கொண்டு தாக்கியுள்ளனர்.

தொடர்ந்து, கத்தியை காட்டி மிரட்டி அவர்களை தங்களது காரில் ஏற்றினர். பின்னர், அவர்களிடத்தில் இருந்த 2.5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த பிறகு,  ஆளில்லாத பகுதியில் இறக்கி விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் சினிமா பாணியில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொள்ளை நடந்த சம்பவத்தை லாரி டிரைவர் ஒருவர் பார்த்து கொண்டிருந்தார். ஆனால், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

செப்டம்பர் 25 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

கல்யாணம் ஆன பிறகு எனக்கு வங்கி கணக்கு கூட இல்லை – ஷாவிடத்தில் ஜெயம் ரவி சொன்ன தகவல்!

செந்தில் பாலாஜி என்ன தியாகம் செய்தார்? – சீமான் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share