ஒரு கப் காபி!

Published On:

| By Balaji

ஏன் மிதிவண்டியில் வந்தாய்?

ஜென் துறவி ஒருவர் தன் சீடர்கள் ஐவர் மிதிவண்டியில் செல்வதைக் கண்டார். அவர்கள் வண்டியை நிறுத்திவிட்டு மடத்துக்குள் வந்ததும் ஒவ்வொருவரையும் அழைத்துக் கேட்டார்.

“ஏன் மிதிவண்டியில் வந்தாய்?”

ADVERTISEMENT

இதுதான் அவர் ஒவ்வொருவரிடமும் கேட்ட கேள்வி.

முதலாவது சீடன்: “உருளைக்கிழங்கு மூட்டையை ஏற்றி வந்தேன். நானா சுமக்கப் போகிறேன்? வண்டிதானே சுமக்கப் போகின்றது? அதனால்தான் மிதிவண்டியில் வந்தேன்.”

ADVERTISEMENT

குரு: “ஆஹா! அருமை. நீ முதியவனாகும்போது என்னைப் போல் தடுமாற மாட்டாய்.”

இரண்டாவது சீடன்: “நான் மிதிவண்டியில் வேகமாகப் போகும்போது என்னைக் கடந்து செல்லும் மரங்களையும் பாதையையும் ரசிப்பேன். அதனால்தான் மிதிவண்டியில் வந்தேன்.

ADVERTISEMENT

குரு: “மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறதே. நீ கண்களை அகலமாய்த் திறந்து உலகைக் கவனிக்கிறாய்.”

மூன்றாம் சீடன்: “நான் மிதிவண்டியில் வரும்போதெல்லாம் மந்திர உச்சாடனம் செய்ய முடிகிறது. அதனால் மிதிவண்டியில் வந்தேன்.”

குரு: “ஆஹா! உன் மனமும் மிதிவண்டியின் சக்கர அச்சுடன் சேர்ந்து லயத்துடன் செயல்படுகிறது. கொடுத்து வைத்தவன் நீ.”

நான்காம் சீடன்: “நான் மிதிவண்டியில் வரும்போது ஒருங்கிணைந்த செயல்பாட்டைக் காண்கின்றேன். கால்கள் மிதிக்கின்றன, கண்கள் பார்க்கின்றன, கைகள் வண்டி கவிழாமல் செல்ல உதவுகின்றன. வண்டியின் ஒவ்வொரு செயல்பாடும், எனது உடலின் ஒவ்வொரு செயல்பாடும் ஒருங்கிணைந்து இருக்கின்றன. அதனால் மிதிவண்டியில் வந்தேன்.”

குரு: “சரியாகச் சொன்னாய்! நீ ஹிம்சையற்ற அஹிம்சைப் பாதை என்னும் தங்கப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றாய்.”

ஐந்தாம் சீடன்: “நான் மிதிவண்டியில் வந்ததற்காக மிதிவண்டியில் வந்தேன்.”

குரு: “நான் உன் சீடனாகத்தான் தகுதி பெற்றவன். நீ என் குருவாக இருக்கத் தகுதி பெற்றவன்.”,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share