ஐபிஎல் மினி ஏலம் இன்று (டிசம்பர் 19) மதியம் 2.30 மணிக்கு துபாய் கோகோ கோலா அரங்கத்தில் நடைபெறுகிறது. மல்லிகா சாகர் முதல்முறையாக ஏலத்தை நடத்தவுள்ளார்.
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஆடி வருபவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழக வீரர் ஒருவர் 10 கோடிக்கு மேல் ஏலம் போவார் என தெரிவித்துள்ளார்.
அவரின் கணிப்பின் படி பஞ்சாப் அணியால் சமீபத்தில் கழட்டி விடப்பட்ட தமிழக வீரர் ஷாருக்கான் தான் அந்த வீரர். சிக்ஸர்கள் அடிப்பதில் சிறந்தவர் என புகழப்படும் ஷாருக்கான், ஏலத்தில் ரூபாய் 10 கோடி முதல் 14 கோடி வரை ஏலம் போவார் என அஸ்வின் கணித்துள்ளார்.
அதோடு ஆஸ்திரேலிய வீரர்கள் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோரும் 14 கோடி ரூபாயை ஏலத்தில் தாண்டுவார்கள் என அஸ்வின் கணித்திருக்கிறார்.
தமிழக வீரர் ஷாருக்கானை சென்னை அணி எடுக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அஸ்வின் கணிப்பு உண்மையாகுமா? என நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
IPL2024: ஐபிஎல் ஏலத்தை நடத்தும் முதல் பெண்… சம்பளம் எவ்வளவுன்னு பாருங்க!
IPL2024: வெயிட்ட கொறைக்க சொல்லுங்க ஐபிஎல்க்கு எடுத்துக்கிறேன்… யாரை சொன்னாரு தோனி?