ஐபிஎல் ஏலம் தற்போது துபாய் கோகோ கோலா அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான், லக்னோ, குஜராத், பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் பங்கேற்று உள்ளன.
ஏலத்தினை மல்லிகா சாகர் நடத்தி வருகிறார். வீரர்களை எடுக்க ஐபிஎல் அணிகள் போட்டி போட்டு வருகின்றன. இந்த நிலையில் ஏலத்திற்காக அங்கு குவிந்திருக்கும் நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
அந்த வகையில் முன்னாள் வீரர்கள் கங்குலி, கவுதம் கம்பீர் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தா ஹைதராபாத் அணியை சேர்ந்த உரிமையாளர் காவ்யா மாறன் ஆகியோர் ஏலத்தில் பங்கு பெற்றுள்ளனர்.
சென்னை கேப்டன் தோனி தற்போது துபாயில் தான் முகாமிட்டு உள்ளார் என்றாலும் கூட ஏலம் நடக்கும் இடத்திற்கு அவர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
IPL2024: இந்த தமிழக வீரர் 10 கோடிக்கு மேல ஏலம் போவாரு… பிரபல வீரரின் கணிப்பு உண்மையாகுமா?
ஆளுநரின் வெள்ள ஆய்வு: டெல்லியில் ஸ்டாலின் டென்ஷன் ரியாக்ஷன்!