IPL2024: ‘ஆரம்பிக்கலாங்களா’ ஐபிஎல் கேப்டனாக தோனி படைத்த புதிய சாதனை!

ஐ.பி.எல் விளையாட்டு

ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டன் தோனி தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

சென்னை, மும்பை, கொல்கத்தா, லக்னோ, குஜராத், பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் என மொத்தம் 10 அணிகள் ஐபிஎல் தொடரில் ஆடி வருகின்றன.

இந்த 16 வருடங்களில் அனைத்து அணிகளின் கேப்டன்களுமே மாறி விட்டனர். ஆனால் சென்னை அணியில் தோனி மட்டும் இன்னும் கேப்டனாகவே நீடித்து வருகிறார்.

தனக்கு மூத்த வீரர்களை பிற அணிகளின் கேப்டன்களாக எதிர்கொண்ட தோனி, அடுத்ததாக தன்னுடைய வயதொத்த கேப்டன்களுடன் ஐபிஎல் ஆடினார்.

பின்னர் கோலி, ரோஹித் என இளம் வயது கேப்டன்களையும், சென்னை அணியின் கேப்டனாக எதிர் கொண்டார். தற்போது தன்னை விட 18 வயது இளம் வீரர் ஸுப்மன் கில்லையும் கேப்டனாக எதிர்கொள்ள இருக்கிறார்.

இதைவிட மும்பை அணியின் ரோஹித், தற்போது அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி இருப்பதால் தோனி தற்போது மேலும் ஒரு சாதனையை வசப்படுத்தி இருக்கிறார்.

அதாவது இப்போது இருக்கும் ஐபிஎல் கேப்டன்களில் தோனி 5 கோப்பைகளுடன் இந்த ஐபிஎல் தொடரை எதிர் கொள்கிறார். ஆனால் மற்ற அணிகளின் கேப்டன்கள்  வசம் கோப்பைகள் எதுவுமில்லை.

ஹர்திக் கேப்டனாக ஒரு கோப்பையை வென்றிருந்தாலும் அது குஜராத்திற்கு சொந்தமானது என்பதால், மும்பை அணியின் கேப்டனாக அவர் வசமும் தற்போது எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

IPL2024: ‘இதயம் உடைந்தது’ முன்னணி வீரரால்… வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள்!

IPL2024: புதிய கேப்டனாக ஹர்திக் நியமனம்… அப்போ ரோஹித்தோட நிலைமை? 

+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *