|

IPL2024: ரோஹித் மனைவி கொடுத்த ‘க்ளூ’… அப்போ அது கன்பார்ம் தானா?

மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா விலக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா அந்த அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

அவருக்கு இதுவரை ரோஹித் வாழ்த்து எதுவும் கூறவில்லை. இதனால் அவரின் விருப்பம் இல்லாமலேயே மும்பை அணி தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளது தெரிகிறது.

இதற்கிடையில் மும்பை அணி ரசிகர்கள் தொடர்ந்து அந்த அணியை சமூக வலைதளங்களில் வறுத்து வருகின்றனர். இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா, சென்னை அணியின் இன்ஸ்டாகிராம் போஸ்டை லைக் செய்துள்ளார்.

இதேபோல சூர்யகுமாரின் மனைவி தெவிஷா ஷெட்டியும், தோனியின் மனைவி சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றை திடீரென லைக் செய்துள்ளார்.

ஒருபுறம் சென்னை அணி ரோஹித்தை அடுத்து வரும் ஏலத்தில் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் சென்னை அணிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மறுபுறம் ரித்திகா, தெவிஷா இருவரும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்களை லைக் செய்து சென்னை அணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து உள்ளனர். இன்ஸ்டாகிராம் போஸ்ட்களை லைக் செய்வது ஒரு பெரிய விஷயம் இல்லை தான்.

ஆனால் மும்பை கேப்டன் ரோஹித் பதவி நீக்கப்பட்டு இருக்கும் இந்த சூழ்நிலையில், மும்பை அணி தொடர்பான போஸ்ட்களை இவர்கள் லைக் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் சென்னை அணி மட்டும் தான், மும்பை அணியில் அவரின் பங்களிப்பை பாராட்டி போஸ்ட் போட்டது என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதற்கிடையில் சென்னை அணியின் மஞ்சள் டீஷர்ட்டை ரோஹித், சூர்யாவுக்கு மாட்டி ரசிகர்களும் அழகு பார்க்க ஆரம்பித்து உள்ளனர்.

இதை இந்திய அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, என்ன இது? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதோடு ரோஹித்தின் வயது தற்போது 36 என்பதால் சென்னை அணியில் அவரை எடுப்பதற்கு எல்லா தகுதிகளும் உள்ளன. ஆக எல்லாத்தையும் கூட்டி, கழிச்சு பார்த்தா கணக்கு கரெக்டா தான் வருது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

வெள்ள நிவாரணத் தொகை: முதல்வர் தொடங்கி வைத்தார்!

வெள்ள நிவாரணத் தொகை: முதல்வர் தொடங்கி வைத்தார்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts